செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ள நிலையில் படத்தின் கிளைமேஸ் காட்சிகள் தற்போது லீக் ஆகி உள்ளது.
இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை எதிர வைக்க கூடிய வகையில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஸ்கின் ,கௌதம் வாசு தேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கான இசையை அனிருத் அமைத்து பட்டையை கிடப்பியிருக்கிறார்ஶ்ரீ அந்த வகையில் நான் ரெடி பாடல் விஜயின் பிறந்தநாளை ஒட்டி வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் லியோ கிளைமாக்ஸ் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை இது அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கிளைமேக்ஸ் காட்சி இப்படித்தான் இருக்கும் என்ற நிலையை உணர்த்தி உள்ளது என கூறலாம்.
கிளைமேக்ஸ் பற்றி அவர் கூறும் போது கிளைமாக்ஸில் விஜய் தன்னை ஒரு பாக்ஸை எடுத்து தாக்க வேண்டும். அப்போது சண்டை பயிற்சியாளரை அழைத்து விஜய் நான் மிஸ்கினை அடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
பின்னர் நான் விஜயிடம் அடி தம்பி ஒன்றுமில்லை என்று கூறினேன்.
அதற்கு விஜய் இல்லை அப்படி செய்தால் உங்களுக்கு காயம் ஏற்படும் என்று கூற, நீ அடிக்கத்தான் வேண்டும் என்று நான் கூறியதை அடுத்து அந்த காட்சியை அவர் செய்தார் என மிஸ்கின் கூறியிருக்கிறார்.
எனவே சீக்ரட்டாக இது வரை இந்த படத்தில் இருந்த கிளைமாக்ஸ் காட்சி பற்றி ஏதும் தெரியாத நிலையில் இவர் கூறியிருக்கும் கருத்து மாபெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
இதனை அடுத்து ஒரு பேட்டிக்கா இப்படி நீங்கள் உளற வேண்டும் என்று சில கமெண்ட்களையும் பதிவு செய்து இருக்கிறார்கள். இதனை அடுத்து படம் திரைக்கு வந்த பிறகு இந்த கிளைமேக்ஸ் ரசிகர்களின் மனதை எப்படி பாதிக்கும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.