"ரியல் பால்காரியாக மாறிய சைத்ரா ரெட்டி..! " - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 


வெள்ளி திரையில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்த சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

சினிமாவில் அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சின்ன திரையில் நடித்து வரும் இவர் அஜித் நடிப்பில் வெளி வந்த வலிமை படத்தில் நடித்திருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

பொதுவாகவே சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகைகள் பெரும்பாலும் பொட்டிக் மற்றும் காஸ்மெட்டிக் பிசினஸ் நடத்தி வருவது புதிதல்ல. ஆனால் சைத்ரா ரெட்டி மிகவும் வித்தியாசமானவராக இருக்கிறார். 

தற்போது கயல் சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், புது பிசினஸில் களம் இறங்கி இருக்கக் கூடிய இவர் அந்த பிசினஸ் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 

இதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள். அட அப்படி என்ன புதிய பிசினஸை இவர் ஆரம்பித்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். 

இவர் வெளியிட்டு இருந்த வீடியோவில் மாட்டிலிருந்து பால் கறக்கக்கூடிய வீடியோ தான் தற்போது வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் சைத்ரா ரெட்டி ஒரு நாள் 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகவும், அதனை அடுத்து தற்போது சொந்தமாக ஒரு மாட்டு பண்ணையை ஆரம்பித்துள்ளதாக பதிவு செய்திருக்கிறார். 

மேலும் மக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் இந்த மாட்டுப்பண்ணை கண்டிப்பாக இருக்கும்.இவரின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்துக்களை கூறி வருவதோடு, அவரது புது பிசினஸ் சூடு பிடித்து வாழ்க்கையில் உச்சத்தை தொட்டு பண மழையில் நனைய வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள். 

உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்திருந்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். உங்களது மேலான கருத்தை வண்ணத்திரையில் பதிவிடுங்கள்.