மணிரத்தினம் மிஸ் பண்ண ராஜராஜ சோழன்..! - அஜித்தின் AI போட்டோஸ்..!

 

தற்போது கணினியின் உச்சகட்ட வளர்ச்சியாக கருதப்படும் ஏஐ பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமா நடிகர்களின் ஏஐ புகைப்படங்கள் அதிகளவு இணையத்தில் வெளிவந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமக்கு பிடித்த நடிகர்களை நாம் எப்படி கற்பனை செய்து பார்க்கிறோமோ? அந்த அளவுக்கு ரியல் இமேஜை கொடுக்கக்கூடிய ஆற்றல் ஏஐக்கு உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. 

இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல நடிகர்களின் ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கலக்கி வரக்கூடிய வேளையில், நடிகர் அஜித் விஷ்ணுவத்துடன் இணைந்து ராஜராஜ சோழன் படத்தை பண்ண திட்டமிட்டதாக செய்திகள் ஒரு பக்கம் வெளி வந்து கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் ராஜராஜ சோழனாகவே ஆஜித்தை ஏ ஐ மூலம் வரைந்து அசத்தியிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது என கூறலாம். இந்த இமேஜை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சும்மா சொல்லக்கூடாது. 

கண்டிப்பாக ராஜ ராஜ சோழன் கெட்டப் அஜித்துக்கு செமையாக பொருந்தி உள்ளது. இப்படி ஒரு படத்தில் நடித்தால் அஜித்தின் லுக் இப்படித்தான் இருக்கும் என்று பேசி வருகிறார்கள். அது மட்டுமா? இந்த கெட்டப்பில் இருக்கக்கூடிய படத்தில் அஜித் நடித்த பூஜை போடும் அன்னைக்கே எல்லா ஏரியாவிலும் பிசினஸ் படுஜோராக நடக்கும் என்று எதிர்பார்ப்புகளை எகிர வைத்து விட்டது. 

மேலும் அண்மையில் மணிரத்தினத்தில் இயக்கத்தில் வெளி வந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாக நடித்திருப்பார். ஆனால் சிவாஜி நடித்த ராஜராஜ சோழன் படத்தில் இருந்த கம்பீர நடிப்பு அவரிடம் இல்லாமல் ஒரு எளிமையான மன்னராகவே காட்சி அளித்திருப்பார். 

இதனால் தான் இந்த கெட் டப் ரசிகர்களை அதிகளவு ஈர்க்கவில்லை. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அஜித்தை ராஜராஜ சோழனாக நடிக்க வைத்திருந்தால் இப்படித்தான் இருக்கும். மணி சார் அதை மிஸ் செய்து விட்டார் என்று அதிகளவு கூறியிருக்கிறார்கள். 

இந்நிலையில் தஞ்சையில் இருக்கும் பெரிய கோவிலை ராஜராஜ சோழன் எப்படி கட்டி இருப்பார் என்கிற கற்பனையோடு உருவாகும் கதையில் அஜித் நடிக்க விரும்பியதாக தகவல்கள் பரவியதை அடுத்து, விஷ்ணுவத்தன் இயக்கத்தில் நடிக்க வேண்டிய இந்த படம் சில காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

எனவே எப்போது வேண்டுமானாலும் இந்த படத்தை கையில் எடுக்க அஜித் தற்போது யோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் இந்த ராஜராஜ சோழன் கெட்டப் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது என கூறலாம்.