பிக் பாஸ் 7 ரவீனாவிற்கும் மணி சந்திராவும் வெளியில் அப்படி - பயில்வான் ரங்கநாதன் ஷாக் ஸ்டேட்மென்ட்.!

 


விஜய் டிவியில் தற்போது மிக பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ் 7 ரியாலிட்டி ஷோ படு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஷோவில் எதற்கும் பஞ்சமில்லை என்று சொல்லக்கூடிய அளவு தினம், தினம் நிகழக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. 

அந்த வகையில் இதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கும். மணிசந்திராவை ரவீனா கடித்தது, காதல் கடியா.. அல்லது அது மாதிரியான கடியா என சந்தேகத்தை கிளப்பி சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறார் சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன்.

இந்த பிக் பாஸ் 7 சீசனில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்ட நிலையில் முதல் வாரம் நாமினேஷன் இல்லாத சூழ்நிலை நிலவியது. எனினும் இந்த சீசனின் இரண்டாவது நாளே நாமினேஷன் ஆரம்பிக்கப்பட்டது. 

ஏற்கனவே எந்த சீசனில் கூல் சுரேஷ், விஷ்ணு, மாயா ஆகிய மூன்று பேருக்கும் தள்ளு முள்ளுகள் ஏற்பட்டதோடு பஞ்சாயத்துக்களுக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்பட்ட வேளையில் நடிகை விஜித்ராவின் உடை குறித்து பல வகையான பேச்சுக்கள் வீட்டுக்குள் எழுந்தது. 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணிசந்திரா மற்றும் ரவீனா இருவருக்குமிடையே நெருக்கம் அதிகரிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்த்து தற்போது உண்மையாகி விட்டது என கூறலாம். 

ஏனெனில் மணிசந்த்ராவின் கையை ரவீனா கடித்தால் மேலும் தனது லிப்ஸ்டிக்கையும், அவரது கையில் பதித்ததின் மூலம் ரவீனா விளையாட்டுக்குத்தான் கடித்தார் என்ற விஷயத்தை பலரும் பல்வேறு வகையில் வேறுபட்ட கோணத்தில் பேசி வருகிறார்கள். 

இதைத்தான் பயில்வான் ரங்கநாதன் இந்த கடி.. காம கடி.. என்று பகிரங்கமாக சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறார்.எனவே இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமா? என்பது போகப் போக தெரியும் என பயில்வான் சொன்னது உண்மையா? என்பதும் தெரிந்து விடும். 

எனவே ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த சர்ச்சை கிளப்பிவிட்டது என்று சொன்னால் மிகையாகாது. இது பற்றி உங்களது அபிப்ராயம் என்ன என்பதை எங்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே.