வேட்டைய ஆரம்பிக்கலாமா? என்று மாஸாக கேட்கும் உலக நாயகன் தொகுத்து வழங்க கூடிய பிக் பாஸ் சீசன் களை கட்ட ஆரம்பித்துவிட்டது. இது வரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் ஏழாவது சீசன் கோலாக்கலமாக நடக்க உள்ளது.
இந்நிலையில் எந்த போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய நபர்கள் யார்? அவர்களின் பெயர் என்னென்ன? என்பது தற்போது வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் ஆவலை அதிகரித்து உள்ளது என கூறலாம்.
விஜய் தொலைக்காட்சியில் இதன் தொடக்க விழா சூட்டிங் சனிக்கிழமை அன்று நடந்து முடிந்தது.
அதில் உலகநாயகன் கமலஹாசன் ஒவ்வொரு போட்டியாளர்களையும் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
எனவே இந்தப் போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இல்லை என்று கூறக்கூடிய அளவிற்கு தான் போட்டியாளர்களின் தேர்வு உள்ளது.
அட அப்படி யார்? யாரை தேர்வு செய்திருக்கிறார்கள்? என்று நீங்கள் நினைக்கலாம். உங்கள் மனதை குதூகலப்படுத்தக்கூடிய வகையில் இந்த 18 போட்டியாளர்களும் இருப்பார்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
யார் இந்த 18 போட்டியாளர்கள் என்ற விவரத்தை பார்க்கலாம்.
1. நடிகர் மற்றும் திரை விமர்சனம் செய்து வரும் கூல் சுரேஷ்.
2. தனது எழுத்துத் தெரிந்தால் மக்களை கவர்ந்த பாவா செல்லத்துரை ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர்.
3. மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த நடிகை விசித்திரா.
4. சீரியல்களில் தனது மாஸான நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஷ்ணு.
5. பாரதி கண்ணம்மாவில் நடித்த நடிகை வினுஷா தேவி
6. பாண்டியன் ஸ்டோர் நடிகர் சரவணன் விக்ரம்.
7. ஏற்கனவே பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா
8. லவ் டுடே படத்தில் நடித்த நடிகை அக்ஷயா உதயகுமார்.
9. டான்சர் ஐஷு
10. நடிகர் கவினை அறைந்து பிரபலமான பிரதீப் ஆண்டனி.
11. மௌன ராகம் 2 சீரியல் நடிகை ரவீனா தாஹா.
12. நடிகை மாயா கிருஷ்ணன்
13.பாடகர் யுகேந்திரன்
14.மணிச்சந்திரா
15.விஜய் வர்மா
16.அனன்யா எஸ் ராவ்
17. அராத்தி youtube சேனலை நடத்தும் பூர்ணிமா தேவி
18.நிக்சன்
மேற்கூறிய 18 பேரும் பிக்பாஸ் 7 சீசனை நம்மை கலகலப்பாக வைத்துக் கொள்வார்களா? இவர்களுக்குள் சர்ச்சைகள், காதலும் மோதலும் ஏற்படுமா? என்பது இனிவரும் நாட்களில் நமக்கு தெரியவரும்.
மேலும் யார் வெற்றி அடைவார்கள்? யார் விட்டுக் கொடுப்பார்கள்? இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை தெரிந்து கொள்ள இனி நீங்கள் பிக் பாஸ் சீசன் 7 இணைந்து இருங்கள்.