என்னய்யா நடக்கிறது என்று கேட்கக்கூடிய அளவிற்கு தற்போது தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ள நிலையில் அண்மையில், இதன் படப்பிடிப்பு லியோ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிக்கப்பட்டு திரைக்கு வரக்கூடிய சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தளபதி 68 படப்பிடிப்பில் பிரபுதேவா, விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டதின் காரணமாக முதல் கட்ட படப்பிடிப்பிலேயே பாடல் காட்சியை படம் பிடித்து இருக்கிறார்கள். இந்த பாடல் காட்சியை பிரபுதேவாவின் அண்ணன் ராஜசுந்தரம் தான் வடிவமைத்து இருக்கிறார்.
இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புகளை துவங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஏற்கனவே அரவிந்தசாமி புக் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கப் போவதில்லை, படத்தை விட்டு வெளியேறி விட்டார் என்ற பகீர் தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து அந்த கேரக்டர் ரோலை யார் செய்யப் போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது. தற்போது அந்த கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது. இந்த வில்லன் ரோலை மைக் மோகன் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சினிமாத்துறையில் நடித்த இவரை மீண்டும் ரீ என்ட்ரி யில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்த வாய்ப்பு அவருக்கு திருப்புமுனையாக அமையலாம் என கூறப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் மைக் மோகன் இது வரை தான் நடித்த திரைப்படங்களிலேயே அதிக அளவு சம்பளத்தை தளபதி 68 படத்திற்காக வாங்கி இருக்கிறார் என்ற செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது.
அப்படி என்றால் அவர் எந்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
நீங்கள் நினைக்கக்கூடிய அளவை விட மிகப்பெரிய தொகையான ரூபாய் இரண்டு கோடியை தான் தளபதி 68 படத்திற்கு சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.
எனவே இது வரை இவர் வில்லன் ரோலில் நடித்ததற்கோ அல்லது கதாநாயகனாக நடித்ததற்கோ இத்தகைய பெரிய தொகையை பெறவில்லை. இந்த படத்தில் மைக் மோகனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என கூறலாம்.