என்ன சொல்றீங்க.. 500 கோடி பட்ஜெட்டில் தமிழ் நடிகர்..! - இயக்குனர் யாருன்னு தெரியுமா..?

தமிழ் திரைப்பட உலகில் தற்போது முன்னணி நாயகனின் வரிசையில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை தக்க வைத்து இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவார் என்ற திரைப்படத்தில் வேறுபட்ட கோணத்தில் நடித்து வருகிறார். 


சினிமாவுக்காக தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் நடிகர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். எனவே தான் இவர் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார். உதாரணமாக இவர் நடித்த ஜெய் பீம், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை நாம் முன் உதாரணமாக கூறலாம். 

இந்த ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்புத் திறனை ரசிகர்கள் ஒவ்வொருவரும் பாராட்டி இருக்கிறார்கள். எனவே சூர்யா படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கும். தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் இவர் சுதா கொங்குரா உடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார். 

அதே சமயத்தில் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படம் முடிந்த பிறகு நடிகர் சூர்யா பாலிவுட் உலகில் களம் இறங்க உள்ளதாக செய்திகள் பரவலாக வந்துள்ளது. 

கர்ணா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பாலிவுட்டில் பிரபலமான மூத்த இயக்குனரான ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்க உள்ளதாக பரபரப்பான செய்திகள் தற்போது வந்துள்ளது. மேலும் இந்த படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை கிளப்பி உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மா எந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாக இருக்கக்கூடிய தகவல்கள் ரசிகர்களின் செவிகளில் தேன் பாய வைத்துள்ளது.