400 கோடி பட்ஜெட் “கங்குவா” படத்தின் ரிலீஸ் தேதி..! - வேற மாறி அப்டேட்..!


நடிகர் சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் கடைசியாக வெளிவந்தது. இதனை அடுத்து இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் "கங்குவா" திரைப்படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான பெயரைக் கொண்ட இந்த படத்தின் பெயரின் காரணம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு வகையாக பேசப்பட்டு வரும், நிலையில் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 


இந்தப் படமானது மொத்தம் பத்து மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என கூறலாம். எனவே ரசிகர்களின் பெருவாரியான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து உள்ளது என கூறலாம். 

சூர்யா இது வரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் என இந்த படத்தைக் கூறலாம். சூர்யாவை வைத்து சிவா மிகச்சிறந்த சரித்திரத்தை படைப்பாரா? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

அது மட்டுமல்லாமல் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை கேட்டதுமே ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்கள். அதற்கு ஏற்றவாறு கங்குவா க்ளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. 

இந்தத் திரைப்படமானது முழுக்க, முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என்று நினைத்தார்கள். ஆனால் அது அப்படி அல்ல படத்தின் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே பீரியட் படமாக இருக்கும் என தற்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பீரியட் காட்சிகளைத் தான் 3D-இல் படமாக்க எடுத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் இந்த படம் பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த பட குழுவானது தாய்லாந்துக்கு இறுதி கட்ட படப்பிடிப்புக்காக சென்றுள்ளதாகவும், அங்கு தான் கிளைமேக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும், கிட்டத்தட்ட அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சூர்யாவின் அபாரமான நடிப்பில் "கங்குவா" படம் திரைக்கு வர வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வந்துள்ளது.

இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சிகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக திரையுலக வாழ்க்கையில் அமையலாம் என்ற கருத்தை கூறி வருகிறார்கள்.