மீண்டும் வேட்டை ஆரம்பித்து விட்டது என்று கூற கூடிய வகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் கூட்டணி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் படு பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக இந்தியன் திரைப்படத்தில் நடித்து முடித்த நிலையில் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மணிரத்தினமும் கமலஹாசனம் இணைய உள்ள அற்புதமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் விக்ரம் திரைப்படமானது மாபெரும் வெற்றியை கமலஹாசனுக்கு தந்து வசூலில் சாதனையை புரிந்த மாதிரி தான், மணிரத்தினம் இயக்கத்தில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டு இந்திய அளவில் தமிழர்களின் வீரத்தையும் பெருமையையும் பேசும்படி அமைந்ததோடு வசூலையும் வாரி தந்தது.
இதனை அடுத்து தற்போது இந்த இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து மக்களுக்கு கொடுக்கக்கூடிய படத்தின் பெயர் கே எச் 234 என்பதுதான். மேலும் இந்த படத்தை மெட்ராஸ் டாக் கீஸ் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயின் மூவிஸ் போன்ற பிரம்மாண்ட நிறுவனங்கள் தயாரித்து வழங்க உள்ளது.
இதனை உறுதி செய்யக்கூடிய வகையில் எந்த படத்தில் இணைந்திருக்கும் படக்குழுவினர்களின் தயாரிப்பு நிறுவனம் தற்போது வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவானது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
எனவே மக்களின் ரசனிக்கு ஏற்றபடி எந்த படம் வெற்றி படமாக அமைய கமலஹாசனின் ரசிகர்கள் பெருத்த ஆதரவோடு காத்திருக்கிறார்கள். விரைவில் திரைக்கு வரும் இந்த திரைப்படம் மணிரத்தினத்தின் கை வண்ணத்தில் மக்களின் மனதை கவரும் படமாக இருக்கும்.
நாயகன் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இணையக்கூடிய இவர்களின் கூட்டணி மீண்டும் ஒரு வெற்றி சகாப்தத்தை படைக்கும் என்று கூறலாம்.