தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் மிகச் சிறப்பான நடிப்பை வெளியிட்டு தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை தான் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணத்தினால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
இதனை அடுத்து திரைப்படம் பக்கம் அதீத கவனத்தை செலுத்தி வரும் நடிகை சமந்தா நடிகர்களை விட அதிக அளவு Instagram பக்கத்தில் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார்.
தற்போது எப்போதும் விட இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறலாம். சுமார் 39 மில்லியன் ஃபாலோயர்களுடன் தென்னிந்திய நடிகைகளின் முதல் இடத்தில் இவர் இருக்கிறார்.
இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் காஜல் அகர்வால் 24 மில்லியன் ஃபாலோயர்களையும், பூஜா ஹெக்டே 24 மில்லியன் ஃபாலோயர்களையும், ஸ்ருதிஹாசன் 24 மில்லியன் ஃபாலோயர்களையும், தமன்னா 23 மில்லியன் ஃபாலோயர்களை அடுத்தடுத்து பெற்று டாப் லிஸ்டில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
நடிகர்களை பொறுத்தவரை இன்ஸ்டால் பக்கத்தில் முதல் இடத்தில் இருப்பவர் அல்லு அர்ஜுன் இவருக்கு 22 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இவரை அடுத்து விஜய் தேவரகொண்டாவிற்கு 19 மில்லியன் பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து நடிகை சமந்தாவுக்கு இந்த அளவு ஃபாலோயர்கள் இருக்கிறார்களா? என்று ஹாலிவுட் வட்டாரமே பேசி வருகிறது.