23 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் ஜோடி சேரும் 51 வயசு நடிகை..! - வேற லெவல் அப்டேட்..!

 

தளபதி விஜயின் லியோ திரைப்படம் வெளிவந்த பிறகு தல ரசிகர்கள் ஆவலோடு விடாமுயற்சி படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் படத்தின் ஷூட்டிங் படு வேகமாக வெளிநாட்டில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கக்கூடிய நபர்கள் யார்? யார்? நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளி வந்து விட்டது. எனினும் தற்போது இந்த படத்தில் நடிக்க இருக்கக்கூடிய நடிகையின் விபரத்தை கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக கூடிய அளவு ஒரு அப்டேட் வந்துள்ளது. 

அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் அஜித்தோடு 23 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து நடித்த ஒரு நடிகை மீண்டும் இவரோடு இணைகின்றார் என்ற இனிப்பான தகவலை பட குழு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என கூறலாம். 

விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரை நடிகர் அஜித்துக்கு இரண்டு ஹீரோயினிகள் உள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ள வரும் நிலையில், இதில் திரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளி வந்து உள்ளது. 

இந்நிலையில் திரிஷா சில காரணத்தால் இந்த படத்தில் இருந்து விலக இருக்கிறார் என்ற தகவல் தற்போது வேகமாக வெளி வருகிறது. எனவே திரிஷா நடிக்க வேண்டிய இடத்தை தற்போது நடிகை தபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே இவர் அஜித்துடன் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி தென் இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்தவர். எனினும் இந்த செய்தி உண்மையானதா? என்பதை இது வரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் கோடம்பாக்கம் பக்கத்தில் எந்த பேச்சுக்கள் அதிகளவு வெளி வருகிறது. 

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி வரும் விடா முயற்சி திரைப்படத்தை பற்றி அஜித்தின் ரசிகர்கள் மாபெரும் கனவோடு இருக்கின்ற வேளையில் இது போன்ற செய்தி உண்மையா? என்பதை அறிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறார்கள். 

எனவே விரைவில் தபு விடாமுயற்சி படத்தில் இணைகிறார் என்ற செய்தியை பட குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு நீங்கள் உங்கள் மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.