தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விக்ரம் திகழ்கிறார். உலக நாயகன் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எத்தகைய கேரக்டர் ரோல்களையும் பக்குவமாக செய்து மக்கள் மத்தியில் பெயர் வாங்கக்கூடியவர்.
அந்த வகையில் தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து சோலோ கிட் கொடுக்க தங்கலான் படம் விக்ரமின் சினிமா கேரியரில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறலாம். இந்த படமானது கோலார் தங்க வயலில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றி பேசும் படமாக இருக்கும்.
இந்த மெகா ஹிட் திரைப்படம் எப்போது வரும் என்று இவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ஆஸ்காருக்கு அனுப்பக்கூடிய திட்டமும் பட குழுவிற்கு உள்ளது என்ற கருத்து தற்போது பரவலாக பரவி வருகிறது.
இதனை அடுத்து விக்ரம் லைலாவிடம் சொன்ன விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அப்படி என்ன அந்த இருபது நிமிடம் இவர் லைலாவிடம் செய்தார் என்பது தற்போது தெரிந்து விட்டது. விக்ரம் பெரிய நடிகர் என்ற நிலையைக் கடந்து அனைவரையும் ஈகோ இல்லாமல் கலகலவென சிரிக்க வைக்கும் தன்மை கொண்டவர்.
பிதாமகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் லைலா எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாராம். இதை பார்த்த விக்ரம் லைலாவிடம் சென்று இருபது நிமிடம் சிரிக்காமல் இருங்கள் என்று சவாலை விட அதற்கு லைலாவும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இதனை அடுத்து விக்ரம் கையில் டைமரோடு லைலா எதிரே நின்று டைமரை ஆன் செய்து இருக்கிறார். ஆனால் லைலாவால் சில நொடிகள் கூட சிரிக்க முடியாமல் இருக்க முடியவில்லை. அது தான் அந்த 20 நிமிடங்கள் நிகழ்ந்த நிகழ்வு.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் லைலா என்றாலே சிரிப்பு தான் அழகு. எனவேஅவரால் எப்படி சிரிக்காமல் இருக்க முடியும் என்று பல வகைகளில் கமாண்டுகளை அளித்து இருக்கிறார்கள்.