லியோ வரும் 19 ல் ரிலீஸ் ஆகுமா? சந்தேகத்தில் பட குழு..!

 


அட.. என்ன ஆச்சு..இப்படி அடி மேல் அடி லியோ படத்துக்கு விழுந்தால் எப்படி ? லியோ வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகத்தை தற்போது பாடக்குழு மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்து கொண்டு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள் எனக் கூறலாம். 

லியோ படம் வெளி வருவதில் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு சிக்கல் தற்போது ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் மனம் வேதனை அடையும்.

இதனல அடுத்து வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா? என்ற சிக்கல் தற்போது பட குழுவிற்கு ஏற்பட்டுள்ளது இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? தமிழகத்தில் அதிகம் இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் இது வரை லியோ படத்திற்கான முன்பதிவு துவங்கப்படவில்லை. 

இந்நிலையில் படம் வெளி வந்து முதல் வாரத்தில் கிடைக்கும் வசூலில் தயாரிப்பு நிறுவனம் 75% கேட்பதாக தற்போது தகவல்கள் வெளி வந்துள்ளது. இந்த விஷயமானது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் அவர்கள் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். 

எனவே இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த விதமான சமூக தீர்வும் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம் என கூறலாம். இதனை அடுத்து முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்கள் நடைபெறுமா? இல்லையா? என்பது தற்போது கேள்விக்குறி ஆகிவிட்டது. 

எனவே தான் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் லியோ ரிலீஸ் ஆவதில் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது 60% மட்டுமே பெற்றுக் கொண்டால் திரையரங்குகளில் லியோ காட்சிகளை ரிலீஸ் செய்வோம் என திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக தெரிவித்த நிலையில் எந்த பிரச்சனை எப்போது தீரும் என்பது தெரியவில்லை. 

இதை அடுத்து விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். 19ஆம் தேதி கட்டாயம் லியோ வெளி வருமா? என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.