மீண்டும் ரஜினியோடு தலைவர் 170 இல் ஜோடி சேரும் நடிகை..! - ஆத்தாடி இன்னும் மூன்று ஹீரோயினிகளா..?

 

ஜெய்லர் திரைப்படத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் கிளப்பிவிட்டார் என்று தான் கூற வேண்டும். இதனை அடுத்து இவர் மகளின் நடிப்பில் வெளிவர உள்ள லால் சலாம் படத்தில் இவர் கெஸ்ட் ரோல் செய்து இருப்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 170 திரைப்படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆகி இருக்கிறார். தலைவர் படம் என்றாலே சும்மா அதிரும் அல்ல என்று கூறக்கூடிய வகையில் இந்த படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

படம் வெளி வருவதற்கு முன்பே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கும் தலைவர் 170 படத்தை டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி டிஜிபி கேரக்டரில் அதுவும் நாகர்கோவில் ஜில்லாவை கலக்கப்போகிறார் என்று தெரியவந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நான்கு நடிகைகளோடு கதை நகரும் என தெரிய வந்துள்ளது. குறிப்பாக நடிகை ஈஸ்வரி ராவுக்கு இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் ரோல் உள்ளது என கூறலாம். இவர் ஏற்கனவே ரஜினிகாந்தோடு காலா படத்தில் ஜோடி போட்டு நடித்தவர் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

இரண்டாவதாக குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்ந்து சினிமாவுக்குள் நுழைந்து, பல சாதனைகளை புரிந்த ரித்திகா சிங் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கக்கூடிய விஷயங்கள் அரசல் புரசலாக வெளி வந்துள்ளது. 

மேலும் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சர்பேட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா கேரக்டரில் நடித்த துஷ்ரா விஜயன் எனும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவலாக வந்துள்ளது. 

அது மட்டுமா? இந்த நடிகைகளை அடுத்து தனுஷ் மற்றும் அஜித் படங்களில் நடித்து வெற்றியை பார்த்த மஞ்சுவாரியாரும் ரஜினியுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்க இருக்க போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளது. 

எனவே இந்த திரைப்படத்தில் நான்கு நடிகைகள் உள்ள தகவலை அறிந்த உடனேயே திரைப்படத்தின் தன்மை எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தற்போது யூகிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

மேலும் பாகுபலி படத்தில் தனது அபார வில்லத்தனத்தை காட்டிய ராணா டகுபதியை இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.