150 படங்கள் நடித்தும் நோ தேசிய விருது..! - அதிர்ஷ்டமில்லா ஹீரோக்கள் லிஸ்ட்..!

 


தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் தேசிய அங்கீகாரம் என்பது சில நடிகர்களுக்கு இன்று வரை கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட நடிகர்கள் யார், யார்? என்பதை பற்றி இந்த பதிவில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லா நடிகர்களுக்குமே ரசிகர்கள் மூலம் அங்கீகாரம் கிடைத்தாலும், அவர்களுக்குள் மகிழ்ச்சியையும் இன்னும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்தித் தருவது விருதுகள் தான். அப்படிப்பட்ட பல விருதுகளை அவர்கள் பெற்றிருந்தாலும் வாழ்நாள் கனவாக தேசிய விருது இருக்கும்.

தங்களுடைய நடிப்புத் திறமையை பல படங்களில் பல்வேறு வகையில் வெளிப்படுத்தியும் இன்னும் தேசிய விருது பெறாத நடிகர்கள் யார்? யார்? என்பதைத்தான் இனி நாம் பார்க்க போகிறோம். 

 மக்கள் மத்தியில் என்றுமே நிரந்தர சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், சினிமா வாழ்க்கையில் சுமார் 47 வருட பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இது வரை 169 படங்களில் நடித்து முடித்து இருக்கும், இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவருக்கு பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே போன்ற உயரிய விருதுகள் கிடைத்து இருந்தாலும் இன்று வரை தேசிய விருது மற்றும் கிடைக்கவில்லை. 

இவரைப் போலவே நடிகர் அர்ஜுன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து தென்னிந்திய ஜாக்கி ஜான் என்று பலராலும் அழைக்கப்பட்ட ஆக்ஷன் கிங், தரமான படங்களை கொடுத்த போதும் இன்னும் இவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம் தான். 

 தமிழ் திரை உலகில் ஆரம்ப நாட்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்த சத்தியராஜ் 80 மற்றும் 90களில் மிகச் சிறப்பான வில்லனாகவும், நடிகராகவும் கலக்கியவர். இவர் பேச்சைப் ரசிக்காதவர்களை இல்லை என்று கூறும் அளவுக்கு நக்கல், நையாண்டி கலந்த இவரது பேச்சுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது, பல விருதுகளை பெற்றிருக்கும் இவருக்கும் தேசிய விருது இன்னும் கிடைக்கவில்லை. 

சிவாஜியின் மகன் பிரபுக்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு இருந்தாலும் இதுவரை அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இவருடைய அப்பாவிற்கும் தேசிய விருது கிடைக்காத காரணத்தால் தான் மகனுக்கும் கிடைக்கவில்லை என்று பலரும் கூறி இருக்கிறார்கள். 

திரைத் துறையில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சுப்ரீம் சூப்பர் ஸ்டார் ஆக இன்று உயர்ந்திருக்கும் சரத்குமார் 90 காலகட்டத்தில் வில்லனாக அதன் பிறகு ஹீரோவாக நடித்தார். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும், இப்போதும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் இவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை.