தென்னிந்திய திரை உலகில் குறிப்பாக தமிழ் திரையுடரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை யாரும் அசைக்க முடியாத அளவிற்கு முன்னணி கதாநாயகியாக நடிகையாக தன்னை நிலை நிறுத்தி இருக்கும் கேரளத்து பைங்கிளி நயந்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
படு பிஸியாக நடிக்கக்கூடிய காலகட்டத்தில் பல வகையான விமர்சனங்கள் மற்றும் கிசுகிசுக்கள் இவரை பற்றி எழுந்தபோதும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முழுமூச்சாக தனது பணியை சிறப்பாக செய்து சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றவர்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக மாறிய நயன் கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரை உலகை கலக்கி வரும் மெகா ஹிட் நடிகை.
அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வருவதற்கான சந்தர்ப்பம் இவருக்கு உருவாக்கி உள்ளது என கூறலாம்.
இதற்கு காரணம் இந்த படமானது பாக்ஸ் ஆபிஸில் சுமார் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது.
தற்போது ஹோலிவுட் மட்டும் கவனத்தை செலுத்தி வரக்கூடிய நயந்தாரா, மண்ணாங்கட்டி மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படம், நடிகர் ஜெய்யுடன் ஒரு படம், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படம் உள்ளிட்ட பல படங்களை தற்போது தன் கைவசம் வைத்திருக்கிறார்.
திரைத்துறையில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விதமான தொழில்களையும் செய்து அசத்தி வரும் நயந்தாரா அண்மையில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்.
9 ஸ்கின் என்ற நிறுவனத்தில் இவர் முதலீடுகள் செய்துள்ளதோடு, நிறுவனத்தின் விளம்பர தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிறுவன விளம்பரத்திற்காக படத்தில் காட்டாத கவர்ச்சியை விளம்பரப் படத்தில் காட்டி இருக்கிறார். தற்போது இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதனை அடுத்து அண்மையில் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்கு நடிகை நயன்தாரா சுமார் ஐந்து கோடி சம்பளம் வாங்கியதாக தெரியவந்துள்ளது.
வெறும் 50 செகண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய இந்த விளம்பரத்திற்கு ஒரு செகண்டுக்கு பத்து லட்சம் என்ற கணக்கில் 50 செகண்டுக்கு 5 கோடி வாங்குகிறார்.
இதைப் பார்க்கும்போது ஒரு படத்தில் ஹீரோயினியாக நடிக்க 12 கோடி மட்டுமே வாங்கும் நயன்தாரா, 50 செகண்ட் விளம்பரத்துக்கு ஐந்து கோடி வாங்கி இருப்பது திரைத்துறை மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பேசும் பொருளாகியும் விட்டது.