கேப்டன் விஜயகாந்த் பற்றி உங்களிடம் அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப நாட்களில் சினிமா துறையில் இவர் வந்த போது இவர் நடித்த படங்களில் பல தோல்வியை தழுவியது.
இதனை அடுத்து சிவாஜி கணேசனுக்கு எப்படி பீம்சிங் இயக்குனராக அமைந்தாரோ, அதுபோல எம் ஜி ஆருக்கு பா நீலகண்டன், ரஜினி மற்றும் கமலஹாசனுக்கு பாலச்சந்தர் என்று வெற்றி கூட்டணி இருந்தது அதுபோலவே விஜயகாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் எஸ் ஏ சந்திரசேகர் என்றால் அது மிகையாகாது.
சினிமாவின் மீது கொண்டிருந்த அதிக அளவு ஆசையால் மதுரை மண்ணில் இருந்து சென்னை வந்தவர். 1979 இல் இனிக்கும் இளமையில் என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க சின்ன வேடங்கள் கிடைத்தது. குறிப்பாக அகல்விளக்கு, நீரோட்டம், சாமந்திப்பூ போன்ற திரைப்படங்களை கூறலாம்.
இதனை அடுத்து 1980களில் இவருக்கு தூரத்து இடி முழக்கம் என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அதுவும் கதாநாயகனாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது, என்றாலும் அந்த படம் தோல்வியில் முடிந்தது.
இவரது சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த படம் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் தான். இதுவே இவருக்கும் எஸ் ஏ சந்திரசேகரனுக்கும் இடையே ஒரு நட்பு பாலத்தை உருவாக்கிய படம் எனக் கூறலாம்.
கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்ற இலக்கை நோக்கி நின்றிருந்த விஜய்காந்திக்கு இந்த படம் மிகச் சிறப்பான முறையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கூறலாம். கேப்டன் விஜயகாந்தை ஒரு மிகச்சிறந்த நடிகராக இந்த படம் வெளி உலகத்து வெளிச்சம் போட்டு காட்டியது.
அடுத்து இவரது நடிப்பில் வெளிவந்த ராமநாராயணரின் சிவப்பு மல்லி மீண்டும் ஹீட் தந்தது.
இதனை அடுத்து இவர் எஸ் ஏ சந்திரசேகரனுடன் இணைந்து நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தில் நடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றார்.
அடுத்தடுத்து வெற்றிகளை தந்த விஜயகாந்த் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் இருவரும் தோல்வி முகத்தில் சில காலம் வாய்ப்புகளே இல்லாமல் இருந்தபோது பி எஸ் வீரப்பா எஸ்ஏ சந்திரசேகரை தேடி வந்து வாய்ப்பைத் தருகிறார்.
பிரபுவை ஹீரோவாக்கி படம் பண்ணலாம் என்பது தான் அப்போதைய திட்டமாக இருந்தது.
அந்த சமயத்தில் எஸ் ஏ சந்திரசேகர் நடிப்பில் நடிக்க கால்ஷீட் இல்லாமல் போனதால் விஜயகாந்த் ஒப்பந்தம் செய்தார்கள். மலையாளத்தில் வெளிவந்த ரத்தம் படத்தின் ரீமேக் தான் இந்த படமாகும்.
இந்த ரீமேக் படமானது சாட்சி என்ற பெயரில் வெளிவர அதில் விஜயகாந்த் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக படம் சூப்பர் ஹிட் அடைந்தது.
மேலும் இவர்களது வெற்றிக் கூட்டணியில் 1985இல் வெளிவந்த நீதியின் மறுபக்கம் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கேப்டன் விஜயகாந்த் அடுக்கடுக்காக பல வெற்றிகளை தந்தார்.
சினிமா துறையில் மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் ஈடுபட்ட இவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். எனினும் இவரது புகழ் எம்ஜிஆர் போல என்றும் மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கும் இதற்கு காரணம் இவரது மிகச் சிறந்த குணம் தான் என்று கூறலாம்.