கமலின் சிகப்பு ரோஜா முதல் ஜெயம் ரவியின் இறைவன் வரை சைக்கோ திரில்லர் படங்கள்..! - ஓர் அலசல்..!




தமிழ் திரையுலகை பொருத்தவரை எத்தனையோ சைக்கோ திரில்லர் படங்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த சிவப்பு ரோஜா படம் பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த படத்தை பாரதிராஜா இயக்க உலகநாயகன் கமலஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. 

இந்தப் படமானது ஒரு வெற்றிகரமான தொழில் அதிபரின் கருப்பு பக்கத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. தமிழில் சுமார் 175 நாட்களுக்கும் மேல் ஓடி இந்த படம் சாதனை படைத்தது. 

 இதனை அடுத்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமான படமாக வெளி வந்த ஆளவந்தான் இந்தப் படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சிறுவயதில் சித்தியின் கொடுமையால் பாதிக்கப்பட்ட கமலஹாசன் பின்னர் சைக்கோவாக மாறிவிடுகிறார். 

இந்தப் படத்திற்கு சங்கர் மகாதேவன் இசையமைக்க மனிஷா கொய்ராலா, ரவீனா, ரியாஸ்கான் போன்ற பல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்தார்கள். 

நடுநிசி நாய்கள் என்ற பெயரில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் சிறுவயதில் தந்தையார் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவனின் கதை பற்றியது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி இருக்கிறார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிதி ராய் நடிப்பில் வெளிவந்த சைக்கோ திரைப்படத்தை மிஸ்கின் இயக்க பார்வையற்ற காதலன் தன்னை காப்பாற்ற வருவான் என்ற நம்பிக்கையில் இந்த படம் நகர்கிறது எந்த படத்தை மிஸ்கின் இயக்கி இருக்கிறார். 

தற்போது வெளிவந்து இருக்கும் இறைவன் திரைப்படமும் இதுபோல ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம் தான் போலீசுக்கே தண்ணி காட்டக்கூடிய அளவு இதில் ஜெயம் ரவி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.