சினிமாவில் தனக்கு என்று எந்த ஒரு பின்னணி இல்லாமல் தன்னுடைய சுய முயற்சியாலும், உழைப்பாலும் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கும் தல அஜித் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படமானது இவரது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது.
அது மட்டுமல்லாமல் திரை உலக வாழ்க்கையில் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது என கூறலாம்.
எதையும் அசால்டாக செய்யக்கூடிய நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் மற்றும் மோட்டர் பைக் பந்தயங்களில் கலந்து கொள்ளக் கூடியவர். மிகச் சிறப்பான முறையில் இரண்டையும் ஓட்டக்கூடிய திறமை படைத்தவர்.
இவர் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் பல வகையான சேவைகளை மக்களுக்காக செய்து வருகிறார். நடிகர் சூர்யா நடத்தக்கூடிய அகரம் பவுண்டேஷனைப் போலவே இவரும் ஒரு பவுண்டேஷனை நிறுவி ஏழை எளிய மக்களுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்து வருவது பலருக்கும் தெரியாது.
சூப்பர் ஸ்டாருக்கு இணையான அந்தஸ்தை பிடித்திருக்கும் தல அஜித் எப்போதும் விளம்பரங்களை விரும்பாத நபர் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே தான் இவர் செய்கின்ற தொண்டு செயல்கள் வெளி உலகத்திற்கு அவ்வளவு தெரியாது.
இவர் தனது அன்னையின் பெயரில் மோகினி பவுண்டேஷன் என்ற பெயரை கொண்ட சமூக சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். விரைவில் இது என் ஜி ஓ அமைப்பாகவும் மாறும் என தெரியவந்துள்ளது.
இதனை அடித்து சில ரசிகர்கள் விளம்பரம் சுத்தமாகவே இல்லை என்றால் பொதுமக்களுக்கு இது எப்படி போய் சேரும் என்பதை கேள்வியாக வைத்திருக்கிறார்கள்.
தகுதி வாய்ந்த நபர்களுக்கு கட்டாயம் உதவிகளை செய்து வரும் இந்த நிறுவனம் பலரது கல்விக்கும் உதவி செய்து உள்ளது.
இப்போது தல அஜித்தின் ஜென்டில்மேன் தன்மை எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.
யாரிடமும் பணத்தை எதிர்பாராமல் தன்னுடைய சொந்த வருவாயிலிருந்து இத்தகைய சேவைகளை அவர் செய்து வருகிறார் என்றால் அவரை நாம் கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும்.
இவரின் எந்த சூப்பர் செயலாட்டம் திரையுலகமே இன்று வரை அவரை கொண்டாடி வருகிறது தல அஜித் தல தான்.