சுந்தர் சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - கதறும் ரசிகர்கள்..!




பேய் படம் என்றால் கண் கொட்ட கொட்ட பார்க்கக்கூடிய நேயர்கள் என்றும் உண்டு. பேய் படத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் உள்ளது என்று கூட கூறலாம். அந்த வகையில் அரண்மனை என்ற படம் வெளி வந்து பார்ட் 1 பார்ட் 2 பார்ட் 3 என நீண்டு கொண்டே போனது. 

அனுமார் வால் போல வளர்ந்து வந்த இந்த அரண்மனை திரைப்படத்தின் பார்ட் 4 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது என கூறலாம். மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கி உள்ள இந்தப் பகுதி நான்கு பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏசிஎஸ் அருண் குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் தயாரிப்பில் உருவாக்கி உள்ளது. 

இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கி நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மெர்சலாகிவிட்டது என கூறலாம். பல ஹிட் படங்களை கொடுத்த சுந்தர் சி இந்த திரைப்படத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணக்கூடிய வகையில் எடுத்திருக்கிறார். 

 ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளி வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை தந்த இந்த படம் தற்போது தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, டெல்லி கணேஷ் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் வெளி வர உள்ளது. 

 குடும்பத்தோடு அனைவரும் அமர்ந்து பார்க்கக்கூடிய படமாக இந்த அரண்மனை பகுதி நான்கு இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இந்த திரைப்படம் வரும் பொங்கல் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். 

 எனவே வரும் பொங்கல் அன்று திகிலான இந்த பேய் படத்தை காண்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. சுந்தர் சி எதிர்பார்க்கக்கூடிய வெற்றியை இந்த திரைப்படம் அவருக்கு கொடுக்குமா? ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த படம் அமையுமா? என்பது பொங்கலுக்கு பின் தெரியவரும்.