கொடுமை.. தமிழ் சினிமாவுல இது தான் நடக்குது.. சகிக்க முடியல.. தமன்னா சுளீர்..!



தென்னிந்திய சினிமாவில் மின்னும் தாரகையாக ஜொலித்த நடிகை தமன்னா பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். ரசிகர்கள் அனைவரும் நடிகை தமன்னாவை மில்க்கி பேபி என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். 

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை தமன்னா கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயில திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்து அசத்தி இருக்கிறார். 

தென்னிந்திய திரைப்படங்களோடு நின்று விடாமல் பாலிவுட் திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் கவர்ச்சிக்கு என்றுமே பஞ்சம் வைத்ததில்லை.படத்தில் தேவையான இடத்தில் கூடுதலாகவே கவர்ச்சி காட்டக்கூடிய இவர் தற்போது சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்தக் கருத்துக்கள் தமன்னா, ஏன் தென்னிந்திய சினிமாவில் அதிகளவு தற்போது நடிப்பதில்லை என்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று கூட கூறலாம். இந்தக் கருத்தை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

மேலும் இந்த கருத்தானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இவர் கொடுத்த பேட்டியில் தென்னிந்திய படங்களின் தன்மையை பற்றி விரிவாக கூறியிருக்கிறார். 

அதிலும் தென்னிந்திய படங்களில் கமர்சியல் விஷயத்திற்கும் மட்டும்தான் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தருவதாகவும், ஹீரோக்களுக்கும் மட்டுமே பெயர் கிடைக்கக்கூடிய கதைகள் எழுதப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

மேலும் இந்தக் குறையை எந்த இயக்குனரிடம் கூறினாலும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே தான் தற்போது இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்று தான் முடிவு செய்து இருப்பதாக கூறி இருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய திரைப்படங்களில் ஹீரோக்களின் மட்டும் கொண்டாடக்கூடிய கதை அம்சம் அதிக அளவு வருவதாகவும், அது மாதிரியான படங்களில் இனி நடிக்காமல் இருப்பது சிறப்பானதாக இருக்கும் என நினைப்பதின் காரணத்தால் தான் இது மாதிரி படங்களில் நடிக்காமல் இருப்பதாக தமன்னா கூறி இருக்கிறார். 

அவர் சொல்லக்கூடிய கருத்து முற்றிலும் உண்மையானதே. சினிமா தோன்றிய காலம் முதற்கொண்டு ஹீரோக்களை சுற்றியே கதை நகர்வது அன்று மட்டும் அன்று முதல் இன்று வரை தொடர் கதையாகவே உள்ளது. 

சில திரைப்படங்கள் மட்டுமே ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் தருவது போல ஹீரோயின்களுக்கு முக்கியம் தரக்கூடிய வகையில் அமைவதால் கட்டாயம் திரைக்கதையில் மாற்றம் அவசியம் தேவை என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.