அப்பாக்கள் யாராக இருந்தாலும், எத்தகைய தொழிலை செய்து வந்தாலும், தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் விடக்கூடாது என்று உறுதியாக இருந்தாலும் தன்னை அறியாமல் கண்களில் குளம் கட்டும்.
ஏனெனில் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே இருக்கின்ற பந்தமானது ஒரு விவரிக்க முடியாத சொர்க்கம் என கூறலாம்.
அந்த வகையில் கன்னியாகுமரியில் பிறந்து தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பவர் தான் தலைவாசல் விஜய்.
இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
எத்தகைய கேரக்டர் ரோலை கொடுத்தாலும் மிகச் சிறப்பான முறையில் மக்கள் மனதில் இடம் பிடிக்கக் கூடிய நேரத்தில் நடிக்கக்கூடிய நடிப்புத் திறன் மிக்கவர்.
தமிழ் திரை உலகப் பொருத்தவரை இவர் 1992 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவரது இயற்பெயர் ஏ ஆர் விஜயகுமார்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பழமொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
நடிப்பதோடு நின்று விடாமல் பல முன்னணி நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து இருக்கும் இவர் அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி நடிகர் பாபு ஆண்டனிக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
ஏறத்தாழ 31 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்து அளப்பரிய சாதனைகளை படைத்திருக்கும் இவர், இவரின் மகளின் திருமணத்தில் நிகழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் நடந்து கொண்டிருக்கிறார்.
மிகச் சிறந்த நீச்சல் வீராங்கனையான இவரது மூத்த மகளின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இவர் கிரிக்கெட் வீரரான அஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் எந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணத்தின் போது மகளை விட்டு பிரிய முடியாமல் தாலி கட்டும் வேளையில் கண்ணீர் மல்க தலைவாசல் விஜய் அழுது உள்ள வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.
மக்கள் மத்தியில் வைரலாகி வரும் எந்த வீடியோவை பார்த்து, எந்த ஒரு தந்தையும் இதுபோல தன் மகளை விட்டு பிரியும் போது நிச்சயம் கண்கலங்குவார் என்பதை இவரது செயல் உறுதி செய்து விட்டது என கூறி இருக்கிறார்கள்.