தனி விமானம் வாங்கியுள்ள நயன்தாரா..! - விலையை கேட்டால் தூக்கி வாரிப்போட்டுடும்..!

 


தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பது போலவே, நடிப்புத் தொழிலோடு பலவிதமான தொழிலையும் செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாது. 

 தமிழ் திரையுலகில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது சக்கை போடு போட்டு வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக நயன்தாரா திகழ்ந்து வருக்கிறார் .மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் என 80 மேற்பட்ட படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். 

சினிமாவில் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் பெண்களுக்கே உரிய சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனக்கு என்று ஒரு தனி பாதையை வகுத்து அதில் பயணப்பட்டு வரும் இவர் இன்று வரை முன்னணி நாயகியாக திகழ்கிறார். 

தற்போது இவர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் நடிகர் சாருக்கானோடு இணைந்து நடித்து பாலிவுட்டிலும் தனது திறமையை மெய்ப்பித்திருக்கிறார். விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பல சொத்துக்களுக்கு சொந்தக்காரி என்று சொன்னால் நீங்கள் உண்மை என்று கூறுவீர்கள்.

அந்த வகையில் நயன்தாரா பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார் என்ற உண்மையை சொன்னால் நீங்கள் வாய்ப்பிளப்பீர்கள். நயன்தாரா வைத்திருக்கும் ஜெட் விமானத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் வெளிவந்தது அதனை அடுத்து ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் இவரும் இணைந்து விட்டார் என கூறலாம்.

நடிகை நயன்தாரா வைத்திருக்கும் சொந்தமான ஜெட் விமானத்தின் மதிப்பு மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இவரிடம் ரூபாய் 1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரியஸ் காரும், ஒரு கோடி மதிப்புள்ள மெசெடியஸ் ஜி எல் எஸ் 350 டி மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் போன்ற உயர்தர சொகுசு கார்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 

இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் நயன்தாரா எப்படி தன்னுடைய கடினமான உழைப்பால் லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார் என்பது என்று. உங்களுக்கும் இது போன்ற சினிமா விஷயங்கள் தெரிந்திருந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.