நம் அண்ணன் சூர்யா நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ஸ்ரீ பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அதுவும் 14 வயதில் நடிக்க வந்த நடிகை தான் ஸ்ருத்திகா.
வயதிலேயே தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவர் ஸ்ரீ படத்தை தொடர்ந்து ஆல்பம், நள தமயந்தி, ஸ்வப்னம், தித்திக்குதே உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
தற்போது சினிமாவில் தலை காட்டாமல் இருக்கும் இவர் ஆள் அடையாளம் தெரியாதபடி மாறி இருக்கிறார் படிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு மகனுக்கு தாயாக இருக்கிறான் என்றால் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படும்.
மேலும் ஸ்ருத்திகா பிரபல காமெடி நடிகரான தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் மாறி இருக்கிறார்.
இதனை அடுத்து மிஸ்டர் மிஸஸ், சின்னத்திரை நான்கு, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் சப்போட்டர் ஆக இருக்கும் இவர் தனது தனிப்பட்ட விஷயத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.
அந்தப் பகிர்வில் இவர் திருமணம் நடக்கும் வரை ஆபாச படம் பார்த்ததில்லை என்றும் திருமணத்திற்கு பிறகு தன் கணவருடன் தான் ஒன்றாக சேர்ந்து பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததாகவும் அந்த படத்தை பார்த்த உடனே வாந்தி ஏற்பட்டதாகவும் கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற மறைமுகமான விஷயங்களை விளம்பர நோக்கத்திற்காக போட்டு உடைக்கிறார்களா? என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனினும் கூச்சம் இல்லாமல் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வது சிலரது முகசூழிப்பை அதிகரித்து உள்ளது என கூறலாம்.