"டாப் சீரியல் நடிகைகளின் சம்பள விவரம்..! - ஒரு எபிசோடுக்கு எவ்வளவு-ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?

 





சினிமா நடிகைகளுக்கு இணையாக சம்பளம் பெறக்கூடிய டாப் சீரியல் நடிகைகளை பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் இந்த பதிவை கட்டாயம் படிப்பதோடு மட்டுமல்லாமல் பகிரவும் செய்யுங்கள். 

இன்று சன் டிவிக்கு நிகராக விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளும் தொடர்களை வெளியிட்டு வந்து மக்களின் பெறுவாரியான ஆதரவை பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் என்றும் தனக்கு என்று அசைக்க முடியாத இடத்தை சன் டிவி பெற்றுள்ளது என கூறலாம். 

புதிய திரைப்படங்கள் தற்போது தொலைக்காட்சியில் வெளியாகிறதோ, இல்லையோ அதற்கு இணையாக பல புதிய சீரியல்கள் நாளுக்கு நாள் படையெடுத்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வந்த வண்ணம் உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை சீரியல்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லப்படக்கூடிய அளவிற்கு புதுப்புது சீரியல்களில் புதுப்புது முகங்கள் நடித்து நமது மனங்களில் இடம் பிடித்து விடுகிறார்கள். 

 அந்த வகையில் ஒரு சீரியல் டிஆர்பிஎல் டாப்பில் வந்தாலோ, அந்த கதையானது உச்சகட்ட கதையாக இருந்து விறுவிறுப்பை மக்கள் மத்தியில் பெற்று விட்டால் அரை மணி நேரத்திற்கு பதிலாக ஒரு மணி நேரம் என்று ஒளிபரப்பாகி வருகிறது. 

 ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஸ்பெஷலாக ஒரு மணி நேரம் அந்த சீரியல்களின் முக்கிய நிகழ்வுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கயல், எதிர்நீச்சல், சுந்தரி வானத்தைப்போல என பல சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளது. 

இந்த சீரியல்களில் நடித்து வரும் டாப் சீரியல் நடிகைகளான சைத்ரா ரெட்டி, கேப்ரில்லா ஆலயா மானசா, ஜனனி, பாப்ரி கோஸ் போன்ற ஹீரோயின்களின் சம்பளத்தை தெரிந்து கொண்டால் சீரியல் நடிகை இவ்வளவு சம்பளம் என்று நீங்கள் வாயை பிளப்பீர்கள். 

சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு ₹20,000, கேப்ரில்லா ஒரு நாளைக்கு ₹12000 ரூபாயும், ஆலியா மானசா ஒரு நாளைக்கு ₹20 ஆயிரம் ரூபாயும், ஜனனி ஒரு நாளைக்கு ₹20 ஆயிரம் ரூபாயும் பாபிரிகோஸ் ஒரு நாளைக்கு ₹10,000 ரூபாய் வீதம் சம்பளம் பெற்று வருகிறார்கள். 

உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும் இவர்கள் ஒரு மாதம் மட்டும் சீரியலில் நடித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது. இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டாயம் பகிருங்கள்.