தீபாவளி அதிரடி சரவெடி போல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரம்யா கிருஷ்ணன் புதிய சீரியல் ஒன்றில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். இது குறித்த பிரமோ வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது பட்டையை கிளப்பும் வண்ணம் வைரலாக தர விவரிக்கிறது.
அந்த வகையில் தற்போது சன் டிவி, விஜய் டிவியை தொடர்ந்து அந்த இரண்டு டிவிக்கும் டப் காம்பெட்டிசன் கொடுக்க ஜீ தமிழ் தொலைக்காட்சி தரமான சம்பவத்தை நிகழ்த்த உள்ளது.
ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம், அமுதாவும் அன்னலட்சுமியும், தவமாய் தவமிருந்து போன்ற சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ள நிலையில் தற்போது எடுத்திருக்கும் எந்த அதிரடி சம்பவத்தை பலரும் வரவேற்று இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 9 முதல் ஒளிபரப்பாக உள்ள நள தமயந்தி சீரியலில் சன் டிவி புகழ் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி ஹீரோயினியாக நடிக்க நந்தா ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
இந்த சீரியல் ப்ரமோஷன் வீடியோவில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். இதை அடுத்து இந்த சீரியலிலும் அம்மன் நடிக்க உள்ளாரா? என்பதை இனி வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்த்தால் தெரியவரும்.