4 ஆண்கள் இருக்கும் அறையில் அதை பண்ண சொன்னாங்க.. ராதிகா பிரீத்தி பகீர்..!

 


சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் பூவே உனக்காக இந்த சீரியலை பார்ப்பதற்காக குடும்பப் பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் ஆவலாக காத்திருப்பார்கள். இதற்கு காரணம் இந்த சீரியலில் நடித்த ராதிகா ப்ரீத்தி தான். 

இந்த சீரியலில் மிக முக்கியமான ரோலில் நடித்து வந்த இவர் பாதியிலேயே வெளியேறிய விஷயம் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார். 

அது என்னவென்றால் பூவே உனக்காக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பேச்சுலர்ஸ் இருக்கும் ரூமுக்கு சென்று ரெடியாக சொன்னார்கள். அங்கே ஒரு நபர் சர்ட் இல்லாமல் இருந்தார். அதுமட்டுமல்லாமல் நான் உள்ளே சென்ற பிறகும் அந்த நபர் எழுந்து வெளியே செல்லவில்லை. 

இந்த மாதிரியான இடத்தில் எப்படி நான் தயாராக முடியும் என்று கேட்டதற்கு பெரிய ஆர்டிஸ்ட் எல்லாம் எங்கெங்கோ சென்று தயாராகிறார்கள் என்ற பதில் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் இப்போது உனக்கு என்ன வந்தது பேசி இருக்கிறார்கள். 

இப்படி எவ்வளவு நாள் தான் அட்ஜஸ்ட் செய்து நடிப்பது. மேலும் ஹோட்டல் சாப்பாடு மற்றும் புரொடக்ஷன் சாப்பாடு என வெளியில் சாப்பிட்ட காரணத்தால் உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டதாக இவர் கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து பூவே உனக்காக சீரியலில் இருந்து இவர் விலகியதற்கான காரணம் இதுதானா? என்று ரசிகர்கள் தற்போது அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். உங்களுக்கு இந்த கருத்துக்கள் பிடித்திருந்தால் இதுபோன்ற தகவல்களை மீண்டும் படிக்க எங்களோடு இணைந்து இருங்கள். முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்.