ரசிகர்களால் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 இன்னும் வந்த பாடு இல்லை. உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தியன் 2 பகுதியை லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயின் நிறுவனம் சேர்ந்து தயாரித்து உள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதின் காரணம் என்ன? என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வரும் வேளையில் இந்தப் படத்தின் ரிலீசில் சிக்கல் உள்ளது என்று தான் கூற வேண்டும்.
ஏற்கனவே படப்பிடிப்பு சமயத்தில் பல பிரச்சனைகளை சந்தித்த இந்தியன் 2 தற்போது ரிலீஸ் தேதியிலும் சிக்கலை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இயக்குனர் சங்கரிடம் எப்போது தான் இந்தியன் 2 படத்தின் வேலைகள் முடிந்து விட்டது என்று கூறுவீர்கள் என கேட்க.. இந்த படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதால் எடிட் பண்ண முடியவில்லை.
வேண்டுமென்றால் பார்ட் 3 எடுப்போமா? என்று அவர் கேட்டிருக்கிறார்.
இதைக் கேட்டவுடன் லைக்கா நிறுவனம் கடுப்பாகிவிட்டது. மேலும் உங்களுக்கு பார்ட் 3 தேவை என்றால் இந்தியன் 2 படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் ரிலீசாக வேண்டும். அப்படி ரிலீஸ் ஆகிவிட்டால் இந்தியன் 3 பண்ணலாம் எனக் கூறியுள்ளது.
இந்த செய்தியை கேட்டவுடன் இயக்குனர் ஷங்கர் சந்தோஷத்தில் இந்தியன் 2 வேலையை முடிக்க முழு வீச்சில் ஆக இறங்கிவிட்டார். இதனை அடுத்து இந்த படம் தள்ளி போவதற்கு என்ன காரணம் என்பதை இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்.
லைக்கா நிறுவனமும் இயக்குனர் சங்கரின் மனநிலையை அறிந்து சிறந்த முறையில் அவரை லாக் செய்து விட்டது என கூறலாம். எது எப்படியோ? இந்தியன் 2 படம் வெளி வர போவது உறுதியாகி விட்ட நிலையில் பாகம் மூன்றுக்கும் பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது போலத்தான் தெரிகிறது.