சந்திரமுகி 2 படத்தை விளாசிய மீசை ராஜேந்திரன் - என்ன இப்படி சொல்லிட்டாரு..!

 

இயக்குனர் வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த சந்திரமுகி பகுதி ஒன்றில் ரஜினிகாந்த் மற்றும் ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருந்ததோடு மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் கிட்டயும் கொடுத்தது. 

மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் கேரக்டரில் மிக சிறப்பாக தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர். அந்த வகையில் தற்போது மீண்டும் வாசுவின் இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாவது பாகம் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ராணாவத், வடிவேலு போன்ற முன்னோடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 

சந்திரமுகி பாகம் ஒன்று பகுதியில் நடிகர் வடிவேலு முருகேசா என்ற கதாபாத்திரத்தில் காமெடியாக நடித்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். அது போலவே இரண்டாவது பாகத்திலும் இவர் காமெடி காட்சிகள் அந்த அளவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது. 

இதனை அடுத்து சினிமாவில் வில்லனாக நடிக்கும் ராஜேந்திரன் அண்மையில் ஊடகத் துறைக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த படம் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரமானது ரஜினிகாந்துக்கு மட்டும்தான் மிகச் சிறப்பாக பொருந்தி உள்ளது. அந்த கதாபாத்திரத்தை போல் எவராலும் நடிக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறியிருப்பது, நடிகர் ராகவா லாரன்ஸின் நடிப்பை மட்டம் தட்டுவது போல இருந்தாலும், அவர் இந்த படத்தில் தனது இயல்பான நடிப்பை தான் வெளிப்படுத்தி இருக்கிறார். 

 படம் பார்ப்பதற்கு ஒரு சீரியலை போல இருப்பதால் அந்த அளவு பிரமாதமாக இல்லை என்று கூறலாம். மேலும் வடிவேலுக்கு இந்த படம் திருப்புமுனையாக கட்டாயம் அமையாது என்பதில் உறுதியான கருத்தை பதிவு செய்து இருப்பதோடு இந்த படம் வடிவேலுவால் தோல்வியைத்தான் சந்திக்கும் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார். 

 எனவே மீசை ராசேந்திரன் கருத்து உண்மையாகுமா? இல்லை மக்கள் மத்தியில் சந்திரமுகி 2 சக்கை போடு போடுமா? என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்.